1 தில்லைவாழ் அந்தணர் தில்லையில் பிறந்த சிவனடியார்கள். வேதங்களில் சிறந்தவர்கள். தானம் தவம் செய்வதிலும் சிறந்தவர்கள்.
2 பொய்யடிமையில்லாத புலவர் சிவன் திருவடிகளே மெய்யுணர்வானது என்று கூறியவர்கள். செய்யுள்கள் பல இயற்றியவர். பல நூல்களைக் கற்றுத் தெளிந்தவர்கள்.
3 பத்தராய்ப் பணிவார்கள். மிகுந்த இனிய மொழிகளைப் பேசுபவர்கள்; மெய்க்குணம் வாய்த்தவர்கள். எப்போதும் எங்கேயும் சிவனடிகளை மறவாதவர்கள்.
4 பரமனையே பாடுவார் சிவபெருமானைப் பாடியவர்கள். ஏதேனும் மொழியை நன்கு பயின்று உள்ளமுருகப் பாடியவர்கள்.
5 சித்தத்தை சிவன்பாலே வைத்தவர். சித்தத்தை சிவன்பாலே வைத்தவர்.
6 திருவாரூர்ப் பிறந்தார் திருவாரூர்ப் பிறந்தார்
7 முப்போதுந் திருமேனி தீண்டுவார் முப்போதுந் திருமேனி தீண்டுவார் - ஆதி சைவ வேதியர்
8 முழுநீறு பூசிய முனிவர் கற்பம், அநுகற்பம், உபகற்பம் என்னமு புறையில் தயாரித்த திருநீற்றை திருமேனி முழுதும் பூசியவர்கள்
9 அப்பாலும் அடிச்சார்ந்தார் தமிழ்நாடுகளுக்கும் அப்பாலுமுள்ள நாடுகளில் உள்ள சிவனடியார்கள்.
1 சுந்தரமூர்த்தி நாயனார் (நம்பியாரூரர்) நடைபெற இருந்த திருமணத்தைத் தடுத்தாட் கொண்ட புராணம்.
2 திருநீலகண்ட நாயனார் சிவன் மேல் செய்த வாக்கிற்காக மனைவியை நெடுங்காலம் தீண்டாமல் இருந்து, சிவனருளிய திருவோட்டின்பொருட்டு வாக்கினை மீற முற்பட்ட புராணம்.
3 இயற்பகை நாயனார் சிவனடியார் எவர் எது கேட்பினும் குறைவின்றிக் கொடுக்கும், கட்டிய மனைவியையே சிவனடியாருடன் அனுப்பிவைத்த புராணம்
4 இளையான்குடி மாற நாயனார் வறுமை வந்த போதினும் சிவனடியார்களுக்கு உணவிடும் வழக்கத்தை விடாதவரின் புராணம்.
5 மெய்ப்பொருள் நாயனார் முத்தநாதன் என்னும் பொய் வேடமிட்ட, தன்னைக் கொன்ற கயவனைக் காப்பாற்றியவரின் புராணம்.
6 விறன்மிண்ட நாயனார் திருவாரூர் மண்ணை மிதித்தமைக்கு தன் கால்களையே வெட்டத் துணிந்தவரும், 'சிவனையே புறம்பு' என்று தள்ளி வைத்தவரின் புராணம்.
7 அமர்நீதி நாயனார் சிவபெருமானின் கிழிந்த கோவணத்திற்காக, தராசுத் தட்டில் குடும்பத்துடன் நின்ற தொண்டரின் புராணம்.
8 எறிபத்த நாயனார் சிவனடியார்களைத் தொல்லை செய்த யானையின் தும்பிக்கையை வெட்டி, மன்னரின் வாளால் தம்மையும் வெட்டத் துணிந்தவரின் புராணம்.
9 ஏனாதிநாத நாயனார் திருவெண்நீறு அணிந்து தன்னைத் தாக்க வந்த அதிசூரன் என்னும் கொடியவனிடம் வெட்டுண்டு மாண்டவரின் புராணம்.
10 கண்ணப்ப நாயனார் வேடுவனாய் பிறந்து சிவலிங்கத்திடம் பேரன்பு கொண்டு, எச்சில் புலால் படைத்தும் , தம் இரு கண்களையும் பறித்து அளிக்க வந்தவரின் புராணம்.
11 குங்குலியக் கலய நாயனார் ஏழ்மையில் உழன்றும், நாள் தவறாமல் குங்குலியத்தூபம் இட்டும், தலைசாய்ந்த சிவலிங்கத்தைக் கழுத்தில் கயிறிட்டு நேராக்கியவரின் புராணம்.
12 மானக்கஞ்சாற நாயனார் மாவிரத முனிவர் வேடமிட்ட சிவனுக்கு, தன் மகளின் திருமணத்தன்று கூந்தலை வெட்டித் தந்தவரின் புராணம்.
13 அரிவட்டாய நாயனார் நாள்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடும் சிவனுக்குப் படைத்து வந்தும், ஒருநாள் அளிக்க இயலாமையின் காரணமாகத் தன்னையே மாய்த்துக் கொள்ள முயன்றவரின் புராணம்.
14 ஆனாய நாயனார் தமது புல்லாங்குழலின் இன்னிசையால் உலகையே மறக்கச் செய்து சிவனும் மயங்கி, தன்னுடனே அழைத்துக் கொண்ட நாயனாரின் புராணம்.
15 மூர்த்தி நாயனார் சந்தனக்கட்டைக்குப் பதிலாகத் தம் கைகளையே தேய்துதக்கொண்டவரும், பட்டத்து யானையால், நாட்டின் மன்னராகவும் ஆனவரின் புராணம்.
16 முருக நாயனார் நாள்தோறும் பலவித மலர்களைப் பறித்து, சிவபெருமானின் விரிசடையில் சாத்தி வந்தவரின் புராணம்.
17 உருத்திர பசுபதி நாயனார் உருத்திர மந்திரத்தை நாள்தவறாமல் பக்தியோடு கூறி வந்தவரின் புராணம்.
18 திரு நாளைப்போவார் நாயனார் நந்தனார் என்னும் பெயர்கொண்டு, புலையராய் பிறந்ததால், தீயில் மூழ்கி புண்ணிய முனிவர் பெருமானாக வடிவங் கொண்டு எழுந்தவரின் புராணம்.
19 திருக்குறிப்பு தொண்ட நாயனார் வண்ணாராகத் தோன்றி, சிவனடியாராக வந்த சிவனின் கந்தையைத் திருப்பித் தர இயலாமல், துவைக்கும் பாறையிலே முட்டி உடைக்க முற்பட்டவரின் புராணம்.
20 சண்டேசுர நாயனார் முற்பிறவி காரணமாய் ஒளிர்ந்த விசாரசருமர் என்னும் பெயர் தாங்கி ஆவினங்கள் மேய்த்து, சிவபூசை செய்து வந்தவரும், சிவபூசையைக் கெடுத்ததனால் தந்தையென்றும் பாராமல் அவரது கால்களை வெட்டியவரின் புராணம்.
21 திருநாவுக்கரசர் நாயனார் நீண்ட நாள் வாழ்ந்த நாயன்மார்: இவரது வரலாறும் நீண்டது; சமணத்திலிருந்து சைவத்தைத் தழுவியவர். உழவாரம் கொண்டு பல கோயில்களைத் தூய்மைப்படுத்தியவர்.
22 குலச்சிறை நாயனார் மணமேற்குடியில் பிறந்தவர். பாண்டிய மன்னனான நின்றசீர் நெடுமாறனுக்கு முதல் அமைச்சராகவும், பாண்டியன் மனைவி மங்கையரக்கரசியாரின் திருத்தொண்டுக்கு மெய்த்தொண்டாரகவும் விளங்கியவர்.
23 பெருமிழலைக் குறும்ப நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் பெரும்பக்தி கொண்டவர். அவருக்கு முன் கைலாயம் சென்று அவரை வரவேற்க, கபால மோட்சம் அடைந்தவர். அட்டமா சித்திகள் கைவரப் பெற்றவர்.
24 காரைக்கால் அம்மையார் ஒரே பெண் நாயனார். இன்னொவரும் உண்டு; ஆனால் அவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயார். சிவபெருமானிடம் இருந்து கணவருக்காக மாம்பழங்கள் பெற்றவர். அவருடைய சிவபக்தியால் அவருடன் வாழ தயங்கி பரமதத்தன் வேறொரு மணம் புரிந்ததால், பேய் உருவம் அருளுமாறு சிவனை வேண்டிப்பெற்றார்.
25 அப்பூதியடிகள் திங்களூரில் வாழ்ந்தவர். நாவுக்கரசரின் பக்தனாக விளங்கியவர். அவரை வரவேற்று திருவமுது அளிக்கும், தறுவாயில் அரவம் கடித்து இறந்த மகனை மறைத்து அமுது படைத்தவர். பின் நாவுக்கரசரின் சிவபலத்தால் மகனை மீண்டும் உயிருடன் பெற்றவர்.
26 திருநீலநக்க நாயனார் திருஞானசம்பந்தருக்குமத் திருத்தொண்டு புரிந்தவர். லிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை ஊதிய மனைவியைத் துறந்து, பின் சிவனின் அருளால் மீண்டும் இல்லறத்தில் இணைத்தவர்.
27 நமிநந்தியடிகள் சிவன் அருளால் தண்ணீரில் தீபம் ஏற்றி தொண்டு புரிந்தவர். நிருவாரூரில் பிறந்து வாழும் அனைவரும் சிவ வடிவமாகவே மாறியிருக்கக் கண்டவர்.
28 திருஞான சம்பந்தமூர்த்தி ஞானப்பால் அருந்தியவர். சமணர்களுக்கு எதிராக வாதம் புரிந்து வென்றவர். நின்றசீர் நெடுமாறன் கூன் நீக்கியவர். நிறைய அற்புதங்கள் நிகழ்த்தியவர்.
29 ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரை முதலில் பகைத்து, பின் இறைவன் அருளால் இரு அடியவர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நட்பு பாராட்டினர்.
30 திருமூல நாயனார் ஆநிரைகளுக்காக இடையன் உடலிலே கூடு விட்டு கூடு பாய்ந்தவர். பத்தாம் திருமுறையான திருமந்திரம் இயற்றியவர்.
31 தண்டியடிகள் நாயனார் பிறவிலேயே புறக்கண்களின்றி பறந்தவர், திருவாரூர் கோயில் தீர்த்தக்குளத்தை அகழ்ந்து சமணர்களால் இகழப்பட்டார். சிவபெருமானின் வரத்தினால் கண்கள் பெற்று, சோழமன்னன் உதவியால் சமணர்களை விரட்டியவர்.
32 மூர்க்க நாயனார் சிவனடியார்களுக்கு உணவிட சூதாடியவர். நற்சூதர் என்றுப் அழைக்கப்பட்டார்.
33 சோமாசிமாற நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் பேரன்பு கொண்டவர், சிவனடியார்களைப் பேணிக்காத்தவர்.
34 சாக்கிய நாயனார். சஈக்கிய மதத்தைச் சார்ந்து பின் சிவ வழியை அடைந்தவர். மிகுந்த பக்தியால் கல்லைக் கொண்டு லிங்கத்தை அர்ச்சித்து சிவனை அடைந்தார்.
35 சிறப்புலி நாயனார் திருவைந்தெழுத்தினை ஓதி தீ வளர்த்து சிவ வேள்விகள் செய்து வந்தவர்.
36 சிறுத்தொண்ட நாயனார் பரஞ்சோதிஎன்னும் இயற்பெயர் கொண்டு மாமாத்திரர் என்னும் குலத்தில் தோன்றியவர். ராசேந்திர சோழனின் படைத்தளபதியாக விளங்கியவர். சீராளன் என்னும் தம் ஐந்து வயது பாலகனை கறியமுது செய்து சிவனுக்கு படைத்தவர்.
37 கழறிற்றறிவார் நாயனார் யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும்' உடமையால் இப்பெயர் பெற்றார். சேர மன்ன்ன். நம்பியாரூர் சுந்தரருக்கு உயிர்த்தோழர் ஆனவர். கைலாயத்திற்கு சுந்தரருக்கு முன், குதிரையில் சென்று அவரை வரவேற்றவர்.
38 கணநாத நாயனார் சிவத்தொண்டர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார். திருமுறைகள் ஓதும் அடியவர்களுக்கு தொண்டுகள் புரிந்தவர். கைலாயத்தில் சிவகணங்களுக்கு தலைவராகும் பேறு பெற்றவர்.
39 கூற்றுவ நாயனார் பகை மன்னர்களுக்கு கூற்றுவனாகத் திகழ்ந்தவர். தில்லவாழ் அந்தணர்களிடம் திருமுடி கேட்டு மறுக்கப்பட்டதால், தில்லை அம்பலவாணனின் திருவடியையே தன் திருமுடியாகப் பெற்றவர்.
40 புகழ்ச்சோழ நாயனார் கருவூரில் இருந்த சோழ மன்னர். சிவகாமியாண்டார் என்னும் நாயனாரின் பூக்கூடையை பறித்துச் சிதறடித்த பட்டத்து யானையைக் கொன்ற எறிபத்த நாயனாரிடம் வாளைக் கொடுத்து தம்மையும் கொல்லுமாறு சொன்னவர். மேலும் அதிகன் என்னும் அரசனின் படைகளைத் தோற்கடித்தவர். வீர்ர்கள் கொணர்ந்த தலைக்குவியலுள் திருநீறு அணிந்த ஒரு சிவனடியாரின் தலையைக் கண்டவுடன் கண்ணீர் மல்கி, அத்தலையுடன் செந்தீயில் புகுந்தவர்.
41 நரசிங்க முனையரைய நாயனார் திருவாதிரை நாளில் சிவனுக்கு பூசை செய்து, திருத்தொண்டர்களுக்கு நூறு பொன் கொடுத்து வந்தவர்.தூர்த்தர் என்னும் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு சிவனடியார்க்கும் அமுதளித்து பொற்காசு அளித்தவர்.
42 அதிபத்த நயனார் பரதவக் குலத்தில் பிறந்தவர். தினமும் கிடைக்கும் முதல் மீனை, 'இது அருட்கூத்து ஆடும் பெருமானுக்கு ஆகுக' என்று மீண்டும் கடலிலே விட்டு விடுவார். ஒரே ஒரு மீன் கிடைக்கச் செய்த நாட்களிலும் அதையே வழக்கப்படுத்திக் கொண்டவர். ஒரு சமயம் அவருக்கு பொன்மீன் கிடைத்த போதும், சிவனுக்கே அளித்த அடியார்.
43 கலிக்கம்ப நாயனார் தம்மிடம் வேலை செய்து வந்த ஓர் ஏவலாள் சிவனடியாராக வரவே, அவருக்கு பாதபூசை செய்யத் தயங்கிய மனைவியின் கைகளை வெட்டியெறிந்தவர்.
44 கலிய நாயனார் திருவொற்றியூர் கோயிலில் எண்ணெய் விளக்கேற்றும் திருப்பணி செய்து வந்தார். சிவனின் எண்ணத்தால் செல்வங்கள் இன்றித் தவித்த அவர் செக்காட்டும் பணி செய்து விளக்கேற்றி வந்தார். அப்பணியும் தீர , மனைவியை விற்க முயன்றவர் இறுதியில் தம் இரத்தத்தைக் கொண்டு விளக்கேற்றினார்.
45 சத்தி நாயனார் தண்டாயம் என்னும் பற்றியிழுக்கும் குறடு போன்ற ஆயுதத்தினால், சிவனடியாரை நிந்தித்துப் பேசுவோரின் நாக்கை அறுத்தவர்.
46 ஐயடிகள் காடவர்கோன் நாயனார். பல்லவர் மரபிலே உதித்தவர். முடி துறந்து செந்தமிழ் வெண்பாவாகிய பாமாலை சூடியவர்.
47 கணம்புல்ல நாயனார் திருப்புலீச்சுரம் என்னும் கோயிலில் திருவிளக்கேற்றும் சிவப்பணி செய்து வந்தார். செல்வம் குறைய கணம்புற்களை வெட்டி விற்று அதன்மூலம் விளக்கேற்றி வந்தார். விலைபோகா கணம்புல்லைக் கொண்டே விளக்கேற்றியவர். அதுவும் இல்லையெனும் போது தன் சிகையை வேத்து விளக்கேற்றி சிவத்தொண்டாற்றியவர்.
48 காரி நாயனார் திருக்கடவூரில் வாழ்ந்தவர். காரிக்கோவை என்னும் நூல் இயற்றி மூவேந்தரின் அன்பைப் பெற்று சிவனடியாருக்குத் தொண்டாற்றியவர்.
49 நின்றசீர் நெடுமாற நாயனார் பாண்டிய மன்னர். சமணத்தைத் தழுவிய இவரை சோழமன்னன் மகளான மங்கையர்க்கரசியின் சிவபக்தியினால் திருஞானசம்பந்த மூர்த்தியின் அருளாலும் சைவத்தைத் தழுவினார்.
50 வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் தன் மனமாகிய கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து சிவபூசை செய்து வந்தவர்.
51 முனையடுவார் நாயனார் பகைவருகளியம் போர் செய்து பெருநிதி பெற்று, அதன் மூலம் சிவனடியார்களுக்கு சிவன்தொண்டு ஆற்றியவர்.
52 கழற்சிங்க நாயனார் மூன்றாம் நந்தி வர்மர், இவரது மனைவி சங்கா என்னும் சமணப் பெண்மணி. செறுக்கை நாயனார், இந்த அரசியின் மூக்கினை வெட்டினார். கணவனோ பூவை எடுத்த கையையே வெட்டி விட்டார்.
53 இடங்கழி நாயனார் இவர் கொடும்பாளூர்மன்னர் மரபில் வந்தவர். இவரது ஆட்சியில் ஒரு சிவனடியார் பிற அடியார்களுக்கு உணவிடுவதற்காக இடங்கழியார் அரண்மனையில் உள்ள பண்டார நெல்லைத் திருட வரவே, அடியார்களுக்கு உணவிட, எவர் வேண்டுமானால் நெல் எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்தவர்.
54 செருத்துணை நாயனார் கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கினை வெட்டிய சிவனடியார்.
55 புகழ்த்துணை நாயனார். சிவனுக்கு அகம்படிமைத் தொண்டு புரிந்து வந்தவர். நாட்டில் பஞ்சம் வரவே சிவன் தினமும் அளித்துவந்த ஒரு பொற்காசு கொண்டு தவறாமல் சிவபூசை செய்து வந்தார்.
56 கோட்புலி நாயனார் சிவன் கோயில்களுக்கு செந்நெல் காணிக்கை அளித்து வந்தார். போர்க்களத்திற்கு செல்லும் சமயத்தில் திரும்பி வரும்வரைத் தேவைப்படும் அளவு நெல்லை சேமித்து, சுற்றத்தாரடம் திருவிரையாக்கலி என்னும் சிவன் ஆணை பெற்றார். ஆனால் நாட்டில் வந்த பஞ்சம் வரவே இவரது நெல்லைப் பயன்படுத்திய அத்துணை சுற்றத்தாரையும் வெட்டிக் கொன்றவர்.
57 பூசலார் நாயனார் மனதினுள் கோயில் எழுப்பியவர். காடவர் மன்னனிடம் இவரது மனக்கோயிலுக்காக இறைவன் கனவில் சென்று திருமுழுக்கு நாளை தள்ளி வைக்கச் சொன்னார்.
58 மங்கையர்க்கரசியார். சோழ மரபிலே வந்து , பாண்டியனை மணந்தவர். திருஞானசம்பந்தப் பெருமானிடம் சமணத்தைத் தழுவிய கணவனுக்காக வேண்டியவர்.
59 நேச நாயனார் நெசவு குடும்பத்தில் வட இந்தியாவில் பிறந்து சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வந்தவர்.
60 கோச்செங்கட் சோழ நாயனார் முற் பிறவியில் சிலந்தியாய் இருந்து, செய்த சிவபூசையின் பலனாக சிவந்த கண்களையுடைய கோச்செங்கண்ணனாகப் பிறந்து நிறைய மாடக்கோயில்கள் கட்டினார்.
61 திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனார் நடுநாட்டில் பாணர் பரம்பரையில் உதித்தவர். மனைவி மாதங்கசூளாமணி உடன் இணைந்து பாடல்களை பண்ணுடன் இயற்றி, யாழிசைத்து பாடி வந்தார்.ஞானசம்பந்தருடன் இணைந்து அவருடைய தொண்டராகவே மாறியவர்.
62 சடைய நாயனார் சுந்தர மூர்த்தி நாயனாரின் தந்தையார்.
63 இசை ஞானியார் சுந்தர மூர்த்தி நாயனாரின் தாயார்.